இந்த ஆண்டு 3இலட்சத்து 40 ஆயிரம் இலங்கை குடிமக்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்க எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அனுமதிகளை பெற்ற சில நிறுவனங்கள் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளது.
அத்தகைய நபர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் தண்டனைகள் விதிக்கப்படும். 2024 ஆம் ஆண்டில், 3 இலட்சத்து 11ஆயிரம் பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு குறித்த எண்ணிக்கையை 12வீதமாக அதிகரிக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திட்டங்களை வகுத்துள்ளது.
அதன்படி, விதிமுறைகளை முறையாக நடைமுறைபடுத்திய பின்னர், மக்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப வேண்டும்.'' என்று கூறியுள்ளார்.