கனடாவில் மில்லியன் கணக்கானோருக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம்..! வழங்கப்படவுள்ள பணத்தொகை


மில்லியன் கணக்கானோருக்கு அடுத்த சில நாட்களில் பணம் அளிக்க இருப்பதாக ஒன்ராறியோ மாகாணம் அறிவித்துள்ளது.

காலநிலை நடவடிக்கை ஊக்கத்தொகை (CAIP) எனப்படும் திட்டத்தின் கீழ் அடுத்தகட்ட தவணையை ஒக்டோபர் 14ம் திகதி முதல் பெடரல் அரசாங்கள் அளித்து வருகிறது.

2019 முதல் அளித்துவரும் குறித்த தொகையானது ஆண்டு தோறும் மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் ஜூலை மாதம் வெளியான தகவலின் அடிப்படையில், காலாண்டு தவணைகளாக அளிக்க அரசாங்கம் முடிவுக்கு வந்துள்ளது.

இதில் முதல் தவணை ஜூலை 15ம் திகதி ஒன்ராறியோ மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டாவது தவணையானது அடுத்த சில தினங்களில் அளிக்கப்படும் என்றே தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தொகையானது ஒன்ராறியோ, ஆல்பர்ட்டா, சஸ்காட்செவன் மற்றும் மனிடோபா மாகாண மக்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.

ஒன்ராறியோவில் தனியொருவருக்கு 373 கனேடிய டொலர் ஆண்டுக்கு அளிக்கப்படுகிறது.

19 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் 93 டொலர் அளிக்கப்பட உள்ளது.

மனைவி அல்லது சட்டத்துக்கு உட்பட்ட துணைவிக்கு 186 டொலர் அளிக்கப்படுகிறது.

ஒற்றை பெற்றோர் கொண்ட குடும்பத்தில் முதல் குழந்தைக்கு ஆண்டுக்கு 186 டொலர் வழங்கப்படுகிறது.

CAIP தொகையை பெற பொதுமக்கள் மனு அளிக்க தேவையில்லை, மாறாக தகுதியான அனைவருக்கும் அதிகாரிகளே உரிய தொகையை அனுப்ப உள்ளனர்.

CAIP தொகை பெற வேண்டும் என்றால் ஒவ்வொரு ஆண்டும் குடிமக்கள் அனைவரும் வருவாய் மற்றும் ஆதாய வரி செலுத்த வேண்டும்.

மேலும், 10 நாட்களுக்குள் குறித்த CAIP பணம் வரவு வைக்கப்படவில்லை என்றால் அதிகாரிகளை நாடாலம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.