4 நாட்கள் மாத்திரமே வேலை - பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள புதிய சோதனை

ஜேர்மனி நாட்டில்   பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு புதிய சோதனை  முயற்சியாக  இன்றிலிருந்து 4 நாட்கள் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது

உலகின் பல நாடுகள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு  குறைவான வேலை நேரத்தை செயல்படுத்தி வருகின்றன.

அந்தவகையில்  பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், அவுஸ்திரேலியா , ஜப்பான்,  ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் குறைந்த நேரம் மாத்திரமே வேலை செய்யப்படுகின்றன.

தற்போது இந்த வரிசையில் ஜேர்மனியும்  இணைந்துள்ளது.

ஒரு வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்கும் பட்சத்தில் மூன்று நாட்கள் விடுமுறை காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பணியாளர்களுக்கு உடல் மற்றும் ஆரோக்கியம் அதிகரிப்பதோடு செயற்திறனும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகின்றது.

மேலும் இந்த செயல்முறை  சோதனை நடைமுறையாக அடுத்த  6 மாதங்களுக்கு  இன்றிலிருந்து அமுல்படுத்தப்படுகிறது.

இதனிடையே பெல்ஜியத்தில் வாரத்தில் 40 மணித்தியாலம்  பணியாளர்கள் வேலை செய்யும் அதேவேளை நெதர்லாந்தில் வாரத்திற்கு 29 மணித்தியாலயம்   மாத்திரமே வேலை செயகிறார்கள்.

இந்த நடைமுறைகள் நல்ல பலன்களை அளிப்பதாக அந்நாட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது