இந்தியாவில் அதிகரிக்கும் ஒமிக்ரோன் தொற்றாளர்கள்!

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 781 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்த தரவுகளின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.இவர்களில் 241 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் 540 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.அதில் அதிகப்டசமாக டெல்லியில் 238 பேருக்கும் மகாராஷ்டிராவில் 167 பேரும் குஜராத்தில் 73 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறைந்தபட்சமாக மணிப்பூர், லடாக், ஹிமாச்சல், கோவா மாநிலங்களில் தலா ஒருவரும், ஜம்மு-காஷ்மீர், சண்டிகர் ஆகிய மாநிலங்களில் தொற்றாலர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.