யாழில் பத்து வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய முதியவர்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) 60 வயது முதியவர் ஒருவர் 10 வயதுச் சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (24.10.2024) யாழ்ப்பாணம் - மருதங்கேணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில் சிறுமி தனியாக வீட்டில் இருந்துள்ளார்.

இதன்போது அவரது வீட்டுக்கு பின் வீட்டில் வசிக்கும் 60 வயது முதியவர் ஒருவர் குறித்த சிறுமியை தவறான முறைக்கு உட்படுத்தியுள்ளார்.

இதனை சிறுமி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்திய நிலையில் மருதங்கேணி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புடைய முதியவர் தலை மறைவாகியுள்ள நிலையில் மருதங்கேணி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.