சாதாரண தர பெறுபேறுகள் : யாழ். மாணவிக்கு நாடளாவிய ரீதியில் கிடைத்த அங்கீகாரம்!

இலங்கையில் நடைபெற்ற கடந்த ஆண்டுக்கான (2022) கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், யாழ் மாணவி ஒருவர் நாடளாவிய ரீதியில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.

நாட்டில் இம்முறை கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையில் 13,588 மாணவர்கள் 09 'A' சித்திகளைப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (01) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதில் யாழ்ப்பணத்தைச் சேர்ந்த மாணவி நாடளாவிய ரீதியில் முன்னிலை பெற்றுள்ளார்.

அதில், கண்டி மகாமாயா பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த மாணவி நாடளாவிய ரீதியில் முதலாமிடத்தைப் பெற்றுள்ள நிலையில் யாழ் வேம்படி மகளிர் வித்தியாலய மாணவி நாடளாவிய ரீதியில் இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

மேலும், இம்முறை பரீட்சைக்கு தொற்றியவர்களில் 72.07 வீதமானோர் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.