யானை திரைப்படத்தின் வெளியீட்டு திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் யானை திரைப்படத்தின் வெளியீட்டு திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி இந்த திரைப்படம் மே மாதம் 6 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கிராமத்து பின்னணியில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். நகைச்சுவை வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளதுடன், ராதிகா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.