அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தேவையில்லை!

அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தேவையில்லை என ஐ.சி.எம்.ஆர் அறிவித்துள்ளது.இது குறித்து மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மாத்திரம் பரிசோதனை செய்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் சளி, இருமல், காய்ச்சல், தொண்டைவலி உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பவர்கள் கட்டாயம் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், அறிகுறி இல்லாதவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.