வடக்கு அயர்லாந்தின் முதலமைச்சர் இராஜினாமா!

வடக்கு அயர்லாந்தின் முதலமைச்சர் பால் கிவன், தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும், பால் கிவனின் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியில் (டியுபி) இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வரவில்லை.பிபிசியின் ரேடியோ அல்ஸ்டரின் நோலன் ஷோவின் படி, இன்று பிற்பகல் கிவனின் இராஜினாமாவை விபரிக்கும் அறிக்கையை கட்சி வெளியிடும் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.வடக்கு அயர்லாந்தின் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் காரணமாக, துணை முதலமைச்சர் மிச்செல் ஓ’நீலும் தனது பதவியை இழக்க நேரிடும்.கிவன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அல்லது அடுத்த வியாழன் நிறைவேற்று கூட்டத்திற்குப் பிறகு தனது பதவியை இராஜினாமா செய்யலாம். அப்போதுதான் வடக்கு அயர்லாந்தில் உள்ள அனைத்து கொவிட்-19 கட்டுப்பாடுகளையும் அமைச்சர்கள் பட்டியலிட திட்டமிட்டுள்ளனர்.கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் வடக்கு அயர்லாந்தின் முதலமைச்சராக பால் கிவன், பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.