தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை முதல் முறையாக பரிசோதித்த வடகொரியா!

வடகொரியா தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சோதித்துள்ளதாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் தெரிவித்துள்ளன.ஜப்பானிய அதிகாரிகள் குறித்த ஏவுகணை 1,100 கிமீ (684 மைல்கள்) பறந்ததாக மதிப்பிட்டுள்ளனர். இது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பறந்து ஜப்பானிய கடல் பகுதியில் விழுந்துள்ளது.கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையால், நிலையான பாதையில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்க முடியும். மேலும், கோட்பாட்டளவில் அமெரிக்காவை அடைய முடியும்.வடகொரியா கடந்த சில வாரங்களாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியா, செயற்கைக்கோள் ஏவுதல் என்று கூறிய சில சோதனைகள் உண்மையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பின் சில பகுதிகளின் சோதனைகள் என்று அமெரிக்காவும் தென் கொரியாவும் கூறியுள்ளன.இன்று (வியாழக்கிழமை) ஏவப்பட்ட ஏவுகணை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஏவப்பட்டதை விட புதியதாகவும் சக்திவாய்ந்ததாகவும் தோன்றியதாக ஜப்பானிய அதிகாரிகள் கூறுகின்றனர். இது 6,000 கிமீ உயரத்தை எட்டியது.2017ஆக்குப் பிறகு முதல் முறையாக முழு வீச்சில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்த வட கொரியா தயாராகலாம் என்று சமீபத்திய வாரங்களில் அமெரிக்காவும் தென் கொரியாவும் எச்சரித்திருந்த நிலையில் இந்த செய்தி வெளிவந்துள்ளது.கடந்த மார்ச் 16ஆம் திகதி வட கொரியா ஒரு சந்தேகத்திற்கிடமான ஏவுகணையை ஏவியதாகவும் அது மேலே ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறியதாகவும் தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது2017ஆம் ஆண்டில் வட கொரியா Hwasong-12 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த. இது சுமார் 4,500 கிமீ உயரத்தை எட்டியது. Hwasong-14 8,000 கிமீ தூரம் வரை செல்லும் திறன் கொண்டதாக இருந்தது.அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே நிலம் சார்ந்த ஏவுகணைகள் உள்ளன.2017ஆம் ஆண்டு ஏவுகணை ஒரு நிலையான பாதையில் ஏவப்பட்டிருந்தால் 13,000 கிமீக்கு மேல் பயணித்திருக்க முடியும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர், அதாவது இது அமெரிக்காவின் கண்டத்தின் எந்தப் பகுதியையும் அடைய முடியும்.