அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டுகளை வெற்றிகரமாக பரிசோதித்து சீனா புதிய உச்சத்தை அடைந்துள்ளதாகவும், சீனா தனது அதிநவீன தொழில்நுட்பத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
சீன விஞ்ஞானிகள், ஹைட்ரஜன் எரிபொருளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த புதிய வெடிகுண்டு, பாதுகாப்புத் துறையில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
அண்மைய சோதனையில், இந்த புதிய தலைமுறை வெடிகுண்டு வெடித்தபோது வெளியான தீப்பிழம்பு இரண்டு வினாடிகளுக்கும் மேலாக நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புரட்சிகரமான வெடிபொருள் தொழில்நுட்பத்தை உருவாக்கிய பெருமை சீன மாகாண கப்பல் கட்டும் கழகத்தின் கீழ் செயல்படும் 705 ஆராய்ச்சி நிறுவனத்தை சாரும்.

ஹாங்காங்கைச் சேர்ந்த புகழ்பெற்ற செய்தி நிறுவனமான சவுத் சீனா மார்னிங் போஸ்ட் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.
வழக்கமான வெடிகுண்டுகளில் பயன்படுத்தப்படும் டிரை நைட்ரோ டொலுவீன் வெடிபொருளுடன் ஒப்பிடும்போது, இந்த 2 கிலோ எடை கொண்ட புளோடார்ச் வெடிகுண்டு 15 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டது என சீன விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆச்சரியமளிக்கும் வகையில், இந்த வெடிகுண்டில் எந்தவிதமான அணுசக்திப் பொருட்களும் பயன்படுத்தப்படவில்லை. இருந்தபோதிலும், வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் வெப்பநிலை 1,000 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புரட்சிகரமான வெடிபொருள் தொழில்நுட்பத்தை உருவாக்கிய பெருமை சீன மாகாண கப்பல் கட்டும் கழகத்தின் கீழ் செயல்படும் 705 ஆராய்ச்சி நிறுவனத்தை சாரும்.
அவர்கள் மெக்னீசியம் அடிப்படையிலான திட நிலை ஹைட்ரஜன் சேமிப்பு பொருளைப் பயன்படுத்தி இந்த வெடிகுண்டை வடிவமைத்துள்ளனர்.
இந்த புதிய வெடிபொருளை சீனாஎவ்வாறு பயன்படுத்த போகிறது என்ற கேள்வி தற்போது அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. இது தொடர்பாக சீன இராணுவப் படையான மக்கள் சுதந்திரப் படை விரைவில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய வெடிபொருளை சீனாஎவ்வாறு பயன்படுத்த போகிறது என்ற கேள்வி தற்போது அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. இது தொடர்பாக சீன இராணுவப் படையான மக்கள் சுதந்திரப் படை விரைவில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்