நீதிமன்ற தீர்ப்பை எவரும் சொந்தம் கொண்டாட முடியாது : மக்களின் வெற்றி என்கிறார் திகாம்பரம்


பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1,700 ரூபாய் நாளாந்த வேதன உயர்வு தொடர்பான வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு தோட்ட நிறுவனங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டிற்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
 
இந்தநிலையில் இதற்கு தனிப்பட்ட ரீதியில் எவரும் சொந்தம் கொண்டாட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இது தொழிலாளர்களின் ஒற்றுமைக்கும், தொழிற்சங்கங்களின் ஒற்றுமைக்கும் கிடைத்த வெற்றியாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
 
இன்றைய பொருளாதார நெருக்கடியில் தொழிலாளர்களுக்கு நியாயமான வேதன உயர்வு கிடைக்க வேண்டும் என்பதில் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தியதாகவும் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.