இலங்கையில் இன்றுமுதல் ஸ்டார்லிங்க் - அறிவிப்பை வெளியிட்டார் எலோன் மஸ்க்


உலகப் பணக்காரர்களில் ஒருவரான  எலோன்  மஸ்க், தனது செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையான ஸ்டார்லிங்க் சேவையானது தற்போது இலங்கையில் கிடைக்கும் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

 
 அதன்படி ஸ்டார்லிங்க்' இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக எலோன் மஸ்க் தனது X தளத்தினுடாக அறிவித்துள்ளார்.

 

இது நாட்டில் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவையினை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்துகிறது.

 
இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய சேவைகளை வழங்க ஸ்டார்லிங்க் லங்கா தனியார் நிறுவனத்திற்கு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் உரிமத்தை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு கடந்த 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வழங்க நடவடிக்கை எடுத்தது.
 

இந்த இணைய சேவை இலங்கையில் தற்போதுள்ள ஃபைபர் தொழில்நுட்ப இணைய சேவையை விட பல மடங்கு வேகமாக இருக்கும் என்பதால், உலகில் எங்கிருந்தும் இந்த சேவையை அணுக உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.