இனி அனுமதி இல்லை! கொழும்பு - காலிமுகத்திடல் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்



கொழும்பு - காலிமுகத்திடலில் சமய நிகழ்வுகள் தவிர்ந்த எந்தவொரு இசை நிகழ்வுகள், அரசியல் கூட்டங்கள் அல்லது பிற ஒன்றுகூடல்கள் என்பவற்றை நடத்த அனுமதி வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை (20.04.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், காலிமுகத்திடலில் சமய நிகழ்வுகள் தவிர்ந்த எந்தவொரு இசை நிகழ்வுகள், அரசியல் கூட்டங்கள் அல்லது பிற ஒன்றுகூடலுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பொது மக்கள் இடையூறின்றி நேரத்தை செலவிடும் இடமாக மாத்திரம் காலிமுகத்திடலை பயன்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதேவேளை 220 மில்லியன் செலவில் காலிமுகத்திடலை அபிவிருத்தி செய்யும் பணியை இலங்கை துறைமுக அதிகாரசபை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.