கர்நாடகாவில் அமலுக்கு வருகிறது இரவு நேர ஊரடங்கு!

இந்தியாவில் தற்போது ஒமிக்ரான் பாதிப்பு 422 ஆக உயர்ந்துள்ளது. டெல்டா வைரஸ் தொற்றைவிட ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவும் என்பதால் ஒமிக்ரான் பரவலை கட்டுபடுத்த அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறுகையில், “டிசம்பர் 28-ம் தேதியிலிருந்து 10 நாட்களுக்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடைவிதிக்கப்படுகிறது.உணவகங்கள், கேளிக்கை விடுதிகளில் 50 % பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் 4,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. கூடுதலாக 3,051 படுக்கைகள் உருவாக்கப்படும்.” என்று அவர் கூறினார்.கர்நாடகாவில் 38 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்படுள்ளது குறிப்பிடதக்கது.