நைஜரில் இராணுவ ஆட்சி - அதிபருக்கு ஆதரவாக மக்கள் போராட்டம்

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் அந்நாட்டு அதிபரான முகமது பாசுமையும் இராணுவத்தினர் சிறைப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நைஜரிலுள்ள அனைத்துவிதமான நிறுவனங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவ வீரர்கள் தேசிய தொலைக்காட்சியில் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் அதிபருக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக தலைநகர் நியாமியில் திரளான மக்கள் வீதிகளில் இறங்கிய போதிலும் இராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

நைஜர் இராணுவத்தினருக்கு எதிராக ஆப்பிரிக்க ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.