வடகொரியாவில் தற்போது புதிதாக பரவும் குடல் தொற்று நோய்!

வடகொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது புதிதாக குடல் தொற்று நோயும் பரவத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.ஹெஜு நகரில் உள்ள மக்கள் கடுமையான குடல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் குடல்தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஹேஜுவு-க்கு மருந்துகளை அனுப்ப அந்தநாட்டு தலைவர் கிம் ஜோ உன் உத்தரவிட்டுள்ளார்.அத்தோடு, பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி தொற்று நோய் தொடர்பான பரிசோதனைகளை தீவிரப்படுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.