கோவிட் வைரஸின் புதிய திரிபு! 11109 பேர் அடையாளங்காணப்பட்டதாக தகவல்

கோவிட் வைரஸின் புதிய திரிபு பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தொற்றானது மிக விரைவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அர்க்டரஸ் எனப்படும் இந்தத் திரிபால், கடந்த வெள்ளிக்கிழமை மாத்திரம் 11,109 புதிய கோவிட் தொற்றாளர்கள் இந்தியாவில் இனங்காணப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த தொற்று இங்கிலாந்து, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அமெரிக்காவிலும் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.