கோட்டா கோ கம போராட்டக்களத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அம்சம்

காலி முகத்திடல்- கோட்டா கோ கம போராட்டக்களத்தில் புதிய அம்சமாக பயிர்ச்செய்கை வலயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 09ம் திகதி காலிமுகத்திடல் அருகே ஆரம்பிக்கப்பட்ட கோட்டா கோ கம போராட்டக்களம் நாளுக்கு நாள் புதுப்புது அம்சங்களுடன் மெருகூட்டப்பட்டு வருகின்றது.

கோட்டா கோ கமவில் தற்போதைக்கு நூலகம், மருத்துவ சிகிச்சைக் கூடம், கலந்துரையாடல் மண்டபம், ஓவியக்கூடம், உயர்கல்வி வகுப்புகள், வானொலி நிலையம், இணைய வசதிகளுக்கான நிலையம் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் உருவாக்கப்பட்டு ஒரு நவீன கிராமத்தின் மாதிரியாக கோட்டா கோ கம காணப்படுகின்றது.

அந்த வகையில் தற்போது கோட்டா கோ கிராமத்தில் பயிர்ச் செய்கை வலயம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் தங்கியிருக்கும் தற்காலிக கொட்டகைகளின் அருகே ஒவ்வொருவரும் சிறு அளவிலேனும் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் வகையில் ஊக்குவிக்கப்படுகின்றனர்.