68வது தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்பட்டது. அதில் தமிழில் சூரரைப்போற்று திரைப்படம், சிறந்தப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் மொத்தம் 5 விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது. சூரரைப்போற்று திரைப்படத்தைச் சுதா கொங்காரா இயக்கியிருந்தார். உண்மை கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.நேற்று வாழ்த்து தெரிவித்திருந்த முதலமைச்சர், சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும் எனக் கூறி இருந்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் போனி கபூர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.