அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அண்மையில் மனிதன் வாழக்கூடிய ஒரு நிலவு தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.
யுரோப்பா கிளிப்பர் என்ற விண்கலம் இந்த முக்கிய மைல்கல்லை கடப்பதற்கான தகுதிகளை பெற்றுக்கொண்டுள்ளது என நாசா அறிவித்துள்ளது.
வியாழன் கிரகத்தின் நிலவுகளில் ஒன்றில் மனிதர் வாழக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுவதுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஆய்வு செய்வதற்காக எதிர்வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி குறித்த விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.
வியாழன் கிரகத்தில் காணப்படும் கடுமையான கதிர்வீச்சு சூழ்நிலையில் விண்கலத்தின் கருவிகள் செயலிழக்காமல் தொழிற்படுவதற்கு தேவையான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விண்கலத்திற்கு பயன்படுத்தக் கூடிய டிரான்சிஸ்டர்கள் தொடர்பில் கடந்த நான்கு மாதங்களாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
யுரோப்பா கிளிப்பர் என்ற இந்த விண்கலத்தை ஏவுவதற்கு தொழில்நுட்ப ஆய்வுகுழு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த விண்கலம் ஞாயிற்று தொகுதியில் பூமியைத் தவிர வேறும் கிரகங்களில் அல்லது இடங்களில் ஜீவராசிகள் வாழ்கின்றனவா என்பது குறித்து கண்டறியும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
வியாழன் கிரகத்தில் பூமியை விடவும் 20000 மடங்கு காந்தப்புல சக்தி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே காந்தப்புல சக்திக்கு ஈடுகொடுக்கக்கூடிய சாதனங்களைக் கொண்டு விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் சேதமடைந்தால் தாமாகவே பழுதுபார்க்கக்கூடிய கட்டமைப்பு காணப்படவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.