ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று அரச விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு வரவேற்பளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று (05) முற்பகல் நடைபெற்றது.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குதிரைப்படையை முன்னிலையாக கொண்டு சுதந்திர சதுக்க வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்திய பிரதமருக்கு சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.
அதனையடுத்து இரு நாடுகளினதும் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்ட பின்னர் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஆரம்பமானது.
இதன்போது கௌரவ வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பளிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்திய பிரதமர் இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோர் பிரமுகர்களுக்கான கௌவரத்தை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து இருநாட்டுத் தலைவர்களும் இருதரப்பு பிரதிநிதிகளை அறிமுகப்படுத்தினர்.
இதேநேரம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்
மேற்கொண்டு நேற்று இரவு 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தத பிரதமர் நரேந்திரடி மோடியை, வெளிவிகார அச்சர் விஜித ஹேரத் தலைமையிலான அமைச்சர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் அமோக வரவேற்பளித்தனர்.
இதனை தொடர்ந்து அவர் அங்கிருந்துகொழும்பு கட்டுநாயக்கா அதிவேக வீதி
வழியாக பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார்.
"பிம்ஸ்டெக்' மாநட்டில் கலந்துகொள்வதற்காக வியாழக்கிழமை தாய்லாந்துக்கு
பயணமாகியிருந்த இந்தியப் பிரதமர், அந்தபயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து இலங்கை வந்தார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை வரையில் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய பிரத
மர், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
இதேநேரம் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு கொழும்பின் பல வீதிகள் நேற்றிரவு தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமையால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (4) இரவு இலங்கை வந்தடைந்தார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நேற்றிரவு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலை வந்தடைந்த போது கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினர் பெரும் வரவேற்பளித்தனர்.
இது குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி,
“ கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினர் எனக்கு வழங்கிய ரம்மியமான வரவேற்புக்கு மழை கூட தடையாக இருக்கவில்லை. அவர்களது அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் நான் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எனது நன்றி!” என்று குறிப்பிட்டுள்ளார்.