குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!


ஜனநாயக போராளிகள் கட்சி வேட்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குத்துவிளக்கு சின்னத்தில் மறவன்பிலவில் போட்டியிடும் ஜனநாயக போராளிகள் கட்சியின் வேட்பாளர் மீதே மறவன்பிலவு பகுதியில் வைத்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   

இவ்வாறு தாக்குதலுக்குள்ளான வேட்பாளர், சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் ஏற்பட்ட பிளவையடுத்து கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் அண்மையில் அண்மையில் இணைந்துகொண்ட ஜனநாயக போராளிகள் கட்சி, வடக்கு கிழக்கில் வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலில் களமிறங்க காத்திருக்கின்றது.

இவ்வாறான நிலையிலேயே குறித்த கட்சியின் யாழ் மறவன்பிலவு பகுதியின் வேட்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.