மாயமான எம்எச்-370 விமானம் : 10 ஆண்டுகளுக்கு பிறகு விலகிய மர்மம்.. விஞ்ஞானி கூறிய அதிர்ச்சி தகவல்

டாஸ்மேனியா பல்கலைக்கழகத்தின் கடல் மற்றும் அண்டார்டிக் ஆய்வு நிறுவன விஞ்ஞானியான வின்சென்ட் லைன் தனது ஆய்வு அறிக்கையை லிங்டின் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்எச்-370 என்ற பயணிகள் விமானம் கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி கோலாலம்பூரில் இருந்து சீனா நோக்கி சென்றபோது காணாமல் போனது.
 
அதில் 227 பயணிகள், 12 விமான ஊழியர்கள் என 239 பேர் இருந்தனர். விமானம் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் 7ஆவது வளைவுக்கு அருகில் விழுந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
 
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக, சுமார் 120,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தேடியும், விமானம் எந்த இடத்தில் விழுந்தது என்பதை கண்டறிய முடியவில்லை. இதனால் 2017-ல் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

ஏற்கனவே நடந்த தேடுதல் பணியின்போது, ஆப்பிரிக்க கடற்கரைகள் மற்றும் அதனை அண்மித்த இந்தியப் பெருங்கடல் தீவுகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளின் பல துண்டுகள் எம்எச்-370 விமானத்தின் துண்டுகள் என உறுதிப்படுத்தப்பட்டன. ஆனால் விமானத்தின் பெரும்பகுதி கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, மாயமான விமானம் குறித்த மர்மம் நீடித்தது.

எம்எச்-370 விமானம் காணாமல் போய் 10 ஆண்டுகளை கடந்த நிலையில், விமானம் விழுந்து மூழ்கிய சரியான இடத்தை கண்டுபிடித்ததாக அவுஸ்திரேலிய விஞ்ஞானி வின்சென்ட் லைன் அண்மையில் கூறியுள்ளார்.
 
டாஸ்மேனியா பல்கலைக்கழகத்தின் கடல் மற்றும் அண்டார்டிக் ஆய்வு நிறுவன விஞ்ஞானியான வின்சென்ட் லைன், இதுபற்றி லிங்டின் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"அறிவியலால் எம்எச்-370 மர்மம் விலகியது' என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியப் பெருங்கடலில் 6,000 மீட்டர் ஆழமான பள்ளத்தில் விமானத்தை விழச்செய்திருப்பதாக கூறி உள்ளார். அவர் தனது ஆய்வு தொடர்பான அறிக்கையையும் விளக்கப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

விமானத்தில் இருந்து பெறப்பட்ட கடைசி இரண்டு தகவல் தொடர்புகள், கட்டுப்படுத்தப்பட்ட கிழக்கு நோக்கிய அவசர தரையிறக்கத்தை குறிப்பிடுகின்றன. இதை ஜெர்னல் ஆப் நேவிகேஷன் (துN) ஏற்றுக்கொண்டது.

இந்திய பெருங்கடலின் 7-வது வளைவில் வந்தபோது எரிபொருள் தீர்ந்து, அதிவேகமாக தலைகீழாக திரும்பி; விமானம் விழுந்திருப்பதாக முதலில் கூறப்பட்டது.

ஆனா கடலில் விழுந்தபோது விமானத்தில் எரிபொருள் இருந்தது, அதன் இயந்திரங்கள் இயங்கிக்கொண்டிருந்தன என்றும், அது ஒரு தலைசிறந்த கட்டுப்படுத்தப்பட்ட தரையிறக்கம் என்றும், எரிபொருள் தீர்ந்ததால் விபத்து நடக்கவில்லை என்றும் லாரி வான்ஸ் கூறியியுள்ளார்.

இவரின் கருத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.