முஸ்லிம் பாடசாலை தீ விபத்து : 17 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு


வட நைஜீரியாவில் உள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றின் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சுமார் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
 
இந்த தீ விபத்து காரணமாக பல மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
 
விடுதியில் சுமார் 100 மாணவர்கள் தங்கியிருந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
விபத்தில் 10 முதல் 16 வயதுடைய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.