மீண்டும் நீதிமன்றில் முருகன் -ஓடோடி வந்த நளினி

சிறையில் இருந்தவேளை பெண் காவல் அதிகாரியிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக 2020ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக வேலூர் நீதிமன்றத்தில் முருகன் முற்படுத்தப்பட்டார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், அவர் மனைவி நளினி உள்ளிட்ட 6 பேரும் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர். ராஜீவ் கொலை வழக்கில் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டு, திருச்சியில் வெளிநாட்டவர்களுக்கான முகாமில் வைக்கப்பட்டுள்ளார் முருகன்.

இந்த நிலையில் சிறையில் இருந்த போது பெண் காவல் அதிகாரியிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக முருகன் மீது 2020ல் வழக்கு பதியப்பட்டது. இதன் விசாரணைக்காக வேலூர் நீதிமன்றத்தில் முருகன் இன்று முற்படுத்தப்பட்டார். அப்போது அங்கு வந்த நளினி, முருகனை சந்தித்து பேசினார்.