கொலைசெய்யப்பட்ட 8 வயது சிறுவன் - அதிர்ச்சியில் காவல்துறை..!பணம் பறிக்கும் நோக்கில் 8 வயது சிறுவனை கொன்ற 15 வயது சிறுவன் தொடர்பான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் இந்தியாவின் ஹரியானா மாநிலம் சண்டிகரில் இடம்பெற்றுள்ளது.

இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் "பணம் பறிக்கும் நோக்கில் குழந்தை கொலை செய்யப்பட்டுளதாக" தெரிவிக்கப்படுகிறது.

இந்த 8 வயது குழந்தை தான் வசித்த வீட்டுத் தொகுதியின் கீழ் தளத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளதாகவும், குழந்தையை காணாததால் அவரது பெற்றோர் குறித்த பிரதேச காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர், குழந்தை கடத்தப்பட்டதாகவும், குழந்தையை திருப்பித் தர 6 இலட்சம் ரூபாய் பணம் தேவைப்படுவதாகவும் காணாமல் போன குழந்தையின் பெற்றோருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அன்றைய தினம் மாலை வீட்டுத் தொகுதியில் சிறுவனுனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட சிறுவனின் பிரதேசத்தில் வசிக்கும் 15 வயது சிறுவனே குறித்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.