யாழ். மாநகர சபை (jaffna Municipal Council) ஊழியர்கள் வீதியோரத்தில் கழிவுப் பொருட்கள் தீயிட்டு எரித்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளனர்.
குறித்த சம்பவம் யாழ். காக்கைதீவு மீன் சந்தையில் இருந்து சுமார் 150 மீற்றர்கள் தொலைவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, புகைமண்டலம் வீதியில் பரவியதால் வீதி விபத்து ஏற்படக்கூடிய அபாயகரமான சூழலும் அங்கு காணப்படுவதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இனந்தெரியாத நபர்கள் இரவு வேளை சனப்புழக்கமற்ற நேரத்தில் வைத்தியசாலை கழிவுகள், வியாபார நிலையங்களின் கழிவுகள், வீட்டுக்கு கழிவுகள் உள்ளிட்ட பல கழிவுப் பொருட்களை வீதியோரங்களில் கொட்டி செல்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு வீதியோரங்களில் கொட்டப்படும் கழிவுகளால் வீதியெங்கும் துர்நாற்றம் வீசுகின்றது.
இந்நிலையில், இன்றையதினம் யாழ்ப்பாண மாநகரசபை (affna Municipal Council) ஊழியர்கள் குறித்த கழிவுப் பொருட்களை அவ்விடத்தில் வைத்தே தீமூட்டியுள்ளனர்.
காக்கைதீவு மீன் சந்தையில் இருந்து சுமார் 150 மீற்றர்கள் தொலைவில் வீதியோரத்தில் கழிவுப் பொருட்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
இதனால் வளி மாசடைந்ததுடன் வீதியால் செல்கின்ற பயணிகள் அசௌகரியங்களையும் எதிர்நோக்கியுள்ளனர்.
அத்துடன் புகைமண்டலம் வீதியில் பரவியதால் எதிரே வருகின்ற வாகனங்கள் தெரியாமல் வீதி விபத்து ஏற்படக்கூடிய அபாயகரமான சூழலும் அங்கு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்படக்கூடிய அபாயகரமான சூழலும் அங்கு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.