யாழ். பல்கலைக்கழகத்தில் எழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றையதினம் (18) உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்திலும் (University of Jaffna) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வானது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, பொதுச் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.