வெளியிடப்பட்டது முள்ளிவாய்க்கால் பிரகடனம்முள்ளிவாய்க்கால் இறுதி யுத்ததில் கொல்லப்பட்டவர்களின் பிரதான நினைவேந்தல், இறுதிப் போரின் சுவடுகளை தாங்கியுள்ள முள்ளிவாய்க்காலில் இடம்பெற்று வரும் நிலையில் நினைவேந்தலின் போது 'முள்ளிவாய்க்கால் பிரகடனம்' வெளியிடப்பட்டுள்ளது.


மூன்றாம் இணைப்பு

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவேந்தும் வகையில் நினைவுச்சுடர் சற்றுமுன் ஏற்றப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் திரண்டிருந்த மக்கள் உணர்வு பூர்வமாக தமது அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.


இரண்டாம் இணைப்பு

தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகத் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (18.05.2023) முள்ளிவாய்க்காலில் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த நினைவேந்தலில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறுவதற்காக அவர்களின் உறவினர்களும் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த மக்களும் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.

இதனை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


முதலாம் இணைப்பு

தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகத் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (18.05.2023) தமிழர்தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றது.


பிரதான நினைவேந்தல் இறுதிப் போரின் சுவடுகளை தாங்கியுள்ள முள்ளிவாய்க்காலில் நடைபெறுகின்றது.


முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் இன்று முற்பகல் 10.29 மணிக்கு மணி ஒலியுடன் ஆரம்பமாகின்றது என்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது. முற்பகல் 10.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, 10.31 மணிக்குப் பொதுச் சுடர் ஏற்றப்படும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 

அதன் பின்னர் மு.ப. 10.32 மணிக்கு மக்கள் சுடரேற்றல் நடைபெறுவதோடு முற்பகல் 10.35 மணிக்கு மதகுருமார் மலரலஞ்சலி செலுத்தப்படும்.

தொடர்ந்து முற்பகல் 10.40 மணிக்கு முள்ளிவாய்க்கால் பிரகடனம் வெளியிடப்படும். அதன்பின்னர் முற்பகல் 10.50 மணிக்கு பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்துவர்.

அதேவேளை, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் அனைவரும் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அணிதிரள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.