கொள்ளையர்களால் பரிதாபமாக உயிரிழந்த தாய்..! : வலைவீசும் பொலிஸார் : மட்டக்களப்பை உலுக்கியுள்ள சம்பவம்


மட்டக்களப்பு நகரில் வீட்டின் முன் வீதியை துப்பரவு செய்து கொண்டிருந்த வயோதிப பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்தெடுத்து அவரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிபப் பெண் சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நகர் நல்லையா வீதியைச் சேர்ந்த 81 வயதுடைய மகேஸ்வரி சரவணமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 24ம் திகதி காலை 6.30 மணிக்கு இந்த வயோதிபப் பெண் தனது வீட்டின் முன்னால் உள்ள வீதியை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குமோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவர், அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த சுமார் 3 இலச்சம் ரூபா பெறுமதியான தங்க சங்கிலியை அறுத்தெடுத்து கொண்டு அவரை வீதியில் தள்ளி வீழ்த்தி விட்டு தப்பிஓடியுள்ளனர்.

இதனையடுத்து வீதியில் வீழ்ந்தவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலைஅதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றிநேற்றுக் காலையில் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றநீதவான், குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்று ஆராய்ந்து சடலம் வைக்கப்பட்டிருக்கும் மட்டுபோதன வைத்தியசாலைக்கும் சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை குறித்த கொள்ளையர்களை  தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய வலைவிரித்து தேடிவருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.