உலகில் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு - 2022ன் கடவுச்சீட்டு தரவரிசை..! முழு விபரம் உள்ளே

 

உலக நாடுகளின் கடவுச்சீட்டுகளில் எது வலிமையானது மற்றும் பலவீனமானது என்பதை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

உலகெங்கிலும் உள்ள எந்த இடத்திற்கும் பயணிக்க, கடவுச்சீட்டு என்பது கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆவணமாகும்.

எந்தவொரு பயணியும் தங்கள் சொந்த நாட்டிற்கும் வெளிநாட்டிற்கும் இடையில் எல்லையைக் கடக்கும் போது ஒரு கடவுச்சீட்டு அவசியம், ஏனெனில் அது வெளிநாட்டில் அவர்களின் அடையாளமாக செயல்படுகிறது மற்றும் அந்த நபர் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர் அல்ல என்பதை உறுதி செய்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் கடவுச்சீட்டு வழங்கும் சிறந்த நாடுகளின் பட்டியல் பொதுவில் வெளியிடப்படுகிறது.

அதேபோல், 2022-ஆம் ஆண்டிற்கான கடவுச்சீட்டுக்களின் மதிப்பீடு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும், லண்டனை தளமாகக் கொண்ட குடிவரவு ஆலோசனை நிறுவனமான ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Henley Passport Index ) 2022 உலகின் வலிமையான மற்றும் பலவீனமான கடவுச்சீட்டுக்களின் தரவரிசையை வெளியிடுகிறது.

கடவுச்சீட்டு தரவரிசை நீங்கள் விசா பெறாமல் எத்தனை நாடுகளுக்குள் நுழையலாம் என்று உங்களுக்குத் தெரிவிக்கிறது.

இது நாட்டிற்கு நாடு மாறுபடும் மற்றும் பல பொருளாதார மற்றும் பிற காரணிகளைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

2022-ஆம் ஆண்டின் கடவுச்சீட்டு தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜப்பானின் கடவுச்சீட்டு உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டாகக் கருதப்படுகிறது. இந்த கடவுச்சீட்டு மூலம் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

இராண்டாவது இடத்தில் சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகள் உள்ளன. அவற்றின் கடவுச்சீட்டின்மூலம் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

மூன்றாவது இடத்தில் ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகள் இடம்பிடித்துள்ளன. அவற்றின் கடவுச்சீட்டின் மூலம் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

நான்காவது இடத்தில் பின்லாந்து, இத்தாலி மற்றும் லக்சம்பர்க் ஆகிய மூன்று நாடுகளும் 5-வது இடத்தில் ஆஸ்திரியா, டென்மார்க், நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நான்கு நாடுகள் இடம்பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவின் கடவுச்சீட்டு 87-வது இடத்தில் உள்ளது. இந்திய கடவுச்சீட்டுடன், சுமார் 60 நாடுகளுக்குள் நுழைய விசா பெற வேண்டிய அவசியமில்லை.

அதேபோல், இலங்கையின் கடவுச்சீட்டு 103-வது இடத்தில் உள்ளது. இலங்கை கடவுச்சீட்டுடன் 42 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.

உலகின் பலவீனமான பாஸ்போர்ட்டை ஆப்கானிஸ்தான் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டியலில் கடைசியாக 112-வது இடத்தில் உள்ளது. இந்த கடவுச்சீட்டுடன் 27 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.

ஈராக் 111-வது இடத்திலும், சிரியா 110-வது இடத்திலும் பாகிஸ்தான் 109-வது இடத்திலும் உள்ளது.