ஐரோப்பிய நாட்டில் 200க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வு
ஐரோப்பிய நாடான கிரீசில் உள்ள சாண்டோரினி தீவில் கடலுக்கு அடியில் கடந்த 3 நாட்களில் 200க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து ஆழிப்பேரலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டது.
இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சாண்டோரினி தீவில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நில அதிர்வால் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க முறையான வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.