பிரித்தானியாவின் ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற புலம்பெயர்ந்தோர் சிறுவர்கள், காணாமல் போயுள்ளதாக தகவல்!

14 மாத காலப்பகுதியில் பிரித்தானியாவின் ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற புலம்பெயர்ந்தோர் சிறுவர்கள், காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜூலை 2021 மற்றும் ஒகஸ்ட் 2022ஆம் ஆண்டுக்கு இடையில், உட்துறை அலுவலகத்தால் தற்காலிகமாக ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்ட 116 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொண்டு நிறுவனங்கள் 11 வயதிற்குட்பட்ட சிறுவர்கள்;, சுரண்டப்படும் அபாயம் இருப்பதாக அஞ்சுகின்றனர்.

நீண்ட கால தங்குமிடங்கள் காணப்பட்டாலும் ஹோட்டல்களைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று உட்துறை அலுவலகம் கூறியது.பிரித்தானியாவுக்கு வரும் குழந்தைகளை பொருத்தமான தங்குமிடங்களில் தங்கவைக்க போதுமான திறன் இல்லை என்று உள்ளூராட்சி மன்றங்கள் கூறியதை அடுத்து, கடந்த ஆண்டு ஜூலை முதல் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளில் அரசாங்கம் தங்கவைத்து வருகிறது.

ஜூலை 2021 மற்றும் ஜூன் 2022ஆம் ஆண்டுக்கு இடையில் தனியாக வந்த சுமார் 1,606 சிறுவர்கள் ஹோட்டல் தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அதன் சொந்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

18 அல்லது அதற்கும் குறைவான வயதுடைய 181 சிறுவர்கள்;, 14 மாத காலப்பகுதியில் காணாமல் போனதைக் கண்டறிந்தது, இது தகவல் சுதந்திரக் கோரிக்கைகளைத் தொடர்ந்து உட்துறை அலுவலகத்தால் வெளியிடப்பட்டது. ஆனால் 65 பேர் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டனர்.