கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள பிள்ளையான் மீது கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுமட்டுமே இருக்கின்றது என்று
எவரும் கருதக் கூடாது என்றும், அவரிடம் நடத்தப்படும் விசாரணைகளின் மூலம் பல்வேறு
விடயங்கள் வெளிவருகின்றன என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
தெரிவித்துள்ளார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது சிலர் குழப்பமடைவதாகவும், அவர்கள் தாக்குதல் சூழ்ச்சியில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டவர்களாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்
களை அறிவிக்கும் செய்தியாளர்சந்திப்பின் போது, பிள்ளையானின்கைது விவகாரம் தொடர்பிலும்உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் தொடர்பிலும் எழுப்பப்பட்ட
கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்த அவர்,
தற்போது எதிர்க்கட்சியிலுள்ள முன்னாள் அரசாங்கத்தில் இருந்தவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் ஏன் குழப்பமடைகின்றனர் என்று நாங்கள்யோசிக்கின்றோம். எவரும் குழப்பமடையத் தேவையில்லை. கடந்த ஐந்தரை வருடங்களாக விசாரணைகளை மூடி மறைக்க அமைச்சரவைக்குள் அரசியல் அதிகாரிகளால் முயற்சிக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் திசைதிருப்பப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைமையில் இப்போதே முறையான விசாரணைகள் நடக்கின்றன.
இப்போது விசாரணைகள் நடக்கும்போது அவர்கள் ஏன் குழப்பமடைகின்றார்கள் என்று புரியவில்லை.
அத்துடன் எதிர்க்கட்சியில் சிலரின் குழப்பத்தின் மூலம் விசாரணைகள் முறையாக நடக்கின்றது என்றே
அர்த்தமாகும்.
இதேவேளை பிள்ளையான் கிழக்குபல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரைகடத்தியுள்ளதாக கூறப்படும் குற்றச்சõட்டுகள் தொடர்பாக மட்டுமே உங்களுக்கு தெரியும். ஆனால் அவருக்குஎதிராக மேலும் குற்றச்சாட்டுகள் பல உள்ளன. அவை தொடர்பில் சாட்சிகள் கிடைத்து வருகின்றன.
அவை தொடர்பில் விசாரணைகள்நடைபெறுகின்றன. அந்த விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில்
பொலிஸாரும் குற்றப் புலனாய்வுத்திணைக்களமும் எதிர்காலத்தில் அறிவிக்கும். இதனால் பிள்ளையான் மீது
கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் கடத்தப்பட்ட குற்றச்சாட்டு மட்டும்
இருப்பதாக நீங்களாகவே தீர்மானித்துக் கொள்ள வேண்டாம்.
அவரை 90 நாட்கள் தடுத்து வைத்துவிசாரணை நடத்தும் போது பல்வேறுதகவல்கள் வெளிவருகின்றன. சிலவிடயங்கள் ஒன்றுக்கொன்று தொடர் புடையவையாக இருக்கின்றன. சிலகுற்றச்சாட்டுகள் மேல் நீதிமன்றங்
களில் நடக்கும் வழக்கு விசாரணைகளுடன் தொடர்புடையவை. இது தொடர்பில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சில கொலைச் சம்பவங்களின் போது எங்கே இருந்தனர் என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான தகவல்கள் தற்போது
வெளிவரத் தொடங்கியுள்ளன. திருப்தியடையக்கூடிய விசாரணைகளாக
இருக்கின்றன. பிரதான சூத்திரதாரிகள் ஒருவரா? இருவரா? யார்? என்பது
தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும்
நீதிமன்றத்திடம் ஒப்படைப்போம்.
இது தொடர்பான விசாரணைகள்முறையாக நடக்கின்றன என்றேகூற வேண்டும். இதற்காக காலஎல்லை தொடர்பில் கூற முடியாதுள்ளது. இந்த சூழ்ச்சியில் நேரடியாகவோ,மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டவர்கள் இப்போது குழப்பமடைந்தாலும் அரசாங்கம் குழப்பமடையாது. இந்த விசாரணைகள்
முறையாக நடக்கும் என்று உறுதியளிக்க முடியும். எவர் எதை வேண்டுமானாலும் கூறலாம்.
ஆனால் எதிர்காலத்தில் மேலும்சிலர் கைது செய்யப்படும் போது இந்த வலையமைப்பு எப்படிச் செயற்பட்டுள்ளது என்றும், இது எவ்வளவு காலமாக நடந்துள்ளதுஎன்பதனையும் அறிந்துகொள்ள
லாம்.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அண்மித்த காலத்தில் மட்டுமன்றி அதற்கு முன்னரும்சில விடயங்கள் நடந்துள்ளன. கொலைகள் மற்றும் கப்பம் பெறுதல் போன்ற விடயங்களும் நடந்துள்ளன.இதேவேளை பிள்ளையான் சிறையில் இருந்துகொண்டு எவ்வாறு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன்சம்பந்தப்பட்டிருப்
இதன்படி வி ச õ ர ø ண க ளி ன் மூலம் அந்த விடயங்கள் தெரி
யவரும். விசேட நிபுணர்கள், தகுதிவாய்ந்த மற்றும் அனுபவம்வாய்ந்த அதிகாரிகளால் நடத்தப்படுகின்றது. விசாரணைகளுக்குதேவையான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்றார்.