உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் மோடி!

உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.மோர்னிங் கன்சல்ட் பொலிட்டிகல் இன்டலிஜென்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில், 71 சதவீதமானவர்கள் மோடியை பிரபலமான தலைவராக அங்கீகரித்துள்ளனர்.அவருக்கு அடுத்தபடியாக மெக்சிகோ ஜனாதிபதி 66 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.13 உலகத் தலைவர்களைக் கொண்ட குறித்த பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.அத்துடன், இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் 26 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளமையும் தெரியவந்துள்ளது.