இந்தியாவின் பாதுகாப்பு தயார் நிலை குறித்து ஆய்வு செய்யும் மோடி!

இந்தியாவின் பாதுகாப்பு தயார் நிலைக் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” பாதுகாப்புத் துறையில் சா்வதேச அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்பங்கள் குறித்தும்  இந்தியாவின் மேம்பட்ட நிலை குறித்தும் அதிகாரிகள் இதன்போது பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் நாட்டில் உள்ள பாதுகாப்புத் தளவாடங்களில் நவீன தொழிநுட்பங்களைக் புகுத்த வேண்டும் எனவும், பாதுகாப்புத் துறையில் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்ய வேண்டுமெனவும்  நரேந்தி மோடி வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.அதேநேரம் ரஷ்ய தாக்குதலின்போது உக்ரைனின் காா்கிவ் நகரில் உயிரிழந்த இந்திய மாணவரான நவீன் சேகரப்பாவின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.