ரீஎன்ட்ரி கொடுக்கிறார் மைக் மோகன்

தமிழ் சினிமாவில் 'மைக்' என்றாலே சட்டென்று ஞாபகத்துக்குவருபவர் மோகன். 1977 ம் ஆண்டு கமலகாசனின் கோகிலா படம் மூலம் அறிமுகமாகிய இவர் பின்னர் கதாநாயகனாக உயர்ந்தார். இவரது படங்களில் பாடல்கள் சூப்பர்  ஹிட்டாக காணப்பட்டது. இதனால் பெரும்பாலான படங்களில் இவரது கேரக்டர் மைக் பிடித்து படுவதாக இருந்தது இதனால் இவர்  மைக் மோகன் என அழைக்கப்பட்டார்.அந்த காலத்தில் அவர் நடித்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. மேலும் அவர் ஒரு வருடத்தில் மட்டும் 17 படங்களில் நடித்து பிசியாக வலம் வந்தார். இவர் கடைசியாக தமிழில் சுட்டப்பழம் என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை.அதன் பிறகு அவர் தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை. இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். நடிகர் சாருஹசனை ஹீரோவாக வைத்து தாதா 87 என்ற படத்தை இயக்கியவர் விஜய் ஸ்ரீ ஜி. இவரின் இயக்கத்தில் தான் மோகன் மீண்டும் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பாக்கப்படுகின்றது.