2 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த உறவுகள்! காஸா, இஸ்ரேலில் கண்ணீரில் நனைந்த மனங்கள்


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீர்மானத்துக்கு அமைய இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமுலாகியுள்ள நிலையில், 20 பிணைக்கைதிகள் மற்றும் 2,000 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகள் தமது உறவுகளை சந்தித்து கண்ணீருடன் ஆரத்தழுவும்; காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல், ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக போர் நீடித்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 20 அம்ச திட்டத்தை ஏற்று இருதரப்பும் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளன.
 
இதன் முதற்கட்டமாக, பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றவர்களில் உயிரோடு உள்ள 20 பேரை ஹமாஸ் அமைப்பினர் நேற்று விடுவித்தனர்.

2 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் வீடு திரும்பிய நிலையில், உறவினர்கள் ஆரத்தழுவி கண்ணீர் சிந்தினர்.
 
இதேபோன்று இஸ்ரேல் அரசும் 2,000 பாலஸ்தீன சிறைக் கைதிகளை விடுவித்தது.
 
பேருந்தில் மேற்கு கரைக்கு வந்த அவர்களை உறவினர்கள் உற்சாகமாக திரண்டு வரவேற்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு உறவினர்களை சந்தித்த சிறைக் கைதிகள் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.