நாட்டாமை உள்ளிட்ட ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மாஸ்டர் மகேந்திரன் அதற்கு பிறகு பல படங்களில் நடித்தார்.விழா என்ற படத்தில் நாயகனாக நடித்தார்.அதன்பிறகு மாஸ்டர் படத்தில் விஜய் சேது பதியின் சிறு வயது கேரக்டரில் நடித்தார். தற்போது இரண்டு மூன்று படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அடுத்து புதிதாக காரா என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். அவதார் என்பவர் இயக்கும் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்ட்டரை விஜய் சேதுபதி ஞாயிறு வெளியிடுகிறார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            