பாரிய தகவல்தொழில்நுட்ப கோளாறு - சர்வதேச அளவில் விமான சேவைகள் வங்கி சேவைகள் செயல் இழப்பு



பாரிய தகவல்தொழில்நுட்ப கோளாறு காரணமாக சர்வதேச அளவில் வங்கிகள் விமானசேவைகள் ஊடக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அவுஸ்திரேலியாவே பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. லண்டனின் பங்குசந்தை பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் அவசரசேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.


அதேசமயம் அவுஸ்திரேலியாவில் விமானசேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும் ,வணிகவளாங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன,கணிணிகள் செயல் இழந்துள்ளதால் ஊடக நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
 
செயல் இழப்பிற்கான காரணம் சரியாக தெரியவராத போதிலும் பாதிக்கப்பட்ட பலர் மைக்ரோசொப்டின் இயக்க முறைமைகளே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

மைக்ரோசொவ்ட் 365 இன் பல சேவைகள் செயலிகளை பாவனையாளர்கள் பயன்படுத்துவதை சிக்கல்கள் குறித்து ஆராய்ந்துவருகின்றோம் என அந்த நிறுவன அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான சேவைகள் வழமைக்கு திரும்பிவிட்டன என அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த செயல் இழப்பிற்கு சர்வதேச சைபர் பாதுகாப்பு நிறுவனமானகிரவுட் ஸ்டிரைக்கில் ஏற்பட்ட பிரச்சினையே காரணம் என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சக பேச்சாளர் சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளமைக்கான அறிகுறி எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.