ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி : மீண்டும் 330 ரூபாவை எட்டுகிறது டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய பெறுமதி குறித்த அறிவிப்பில், டொலரின் கொள்வனவு விலை 313.29 ரூபாவாகவும் விற்பனை விலை 327.16 ரூபாவாகவும் காணப்படுகிறது.

இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று பாரியளவில் வீழ்ச்சிக்கண்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய பெறுமதி குறித்த அறிவிப்பில்,  டொலரின் கொள்வனவு விலை 313.29 ரூபாவாகவும் விற்பனை விலை 327.16 ரூபாவாகவும் காணப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை டொலரின் கொள்வனவு விலை 310.49 ரூபாவாகவும் விற்பனை விலை 324.67 ரூபாவாகவும் காணப்பட்டது.

என்றாலும், தனியார் வங்கிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 330 ரூபாவுக்கும் அதிகமாகவே டொலர் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாத ஆரம்பத்தில் டொலரின் பெறுமதி 285 ரூபாவரை வீழ்ச்சிக்கண்டிருந்ததால் ரூபாயின் பெறுமதி பாரியளவில் அதிகரித்திருந்தது.

என்றாலும், மீண்டும் டொலரின் பெறுமதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ரூபாவின் பெறுமதி குறைவடைந்து வருகிறது. இந்த அதிகரிப்பு பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடுமென வர்த்தகர்கள் கூறுகின்றனர்.