உக்ரைன் படை ஆவேச தாக்குதல் - 24 மணிநேரத்தில் 600 ரஷ்ய படையினர் கொன்று குவிப்பு

உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றிபெறமுடியாத வகையில் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் படைகள் கடும் எதிர்தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

உக்ரைனில் சில பிரதேசங்களை கைப்பற்றிய ரஷ்யா அதில் மூன்று பிரதேசங்களை தன்னுடன் இணைப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி அதில் வெற்றி பெற்றதாக அறிவித்து அவற்றை இணைத்துக்கொண்டது.

இவ்வாறு இணைக்கப்பட்ட கெர்சன் பகுதியை முழுமையாக கைப்பற்றுவதற்கு ரஷ்ய படை முனைப்பு காட்டி வருவதால் அப்பகுதியில் மோதல் உக்கிரம் பெற்றுள்ளது.

இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 600 ரஷ்ய போர் வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் வாரங்களில் உக்ரைன் மற்றும் ரஷ்ய படைகளுக்கு இடையே கடுமையான சண்டை இடம்பெறும் எனவும் இரத்த ஆறு ஓடும் எனவும் உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.

 உக்ரைன், ரஷ்யா இடையிலான இராணுவ நடவடிக்கை தொடங்கியதில் இருந்து குறைந்தபட்சம் 75,440 ரஷ்ய வீரர்கள் களத்தில் இருந்து அகற்றப்பட்டதாக உக்ரைனிய ஆயுதப்படைகளின் பொது ஊழியர்கள் சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

மேலும் நவம்பர் 5 நிலவரப்படி, இந்த போர் நடவடிக்கையில் ரஷ்யா குறைந்தது 2,758 டாங்கிகள், 277 ராணுவ ஜெட் விமானங்கள், 260 ஹெலிகொப்டர்கள், 16 போர்க்கப்பல்கள், 5,601 கவச வாகனங்கள் மற்றும் 399 கப்பல் ஏவுகணைகளையும் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.