யாழ் மாவட்ட செயலக பதில் அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்!

யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இருந்த மருதலிங்கம் பிரதீபன் யாழ். மாவட்ட செயலக பதில் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த கணபதிப்பிள்ளை மகேசன், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில் அந்த இடத்திற்கு மருதலிங்கம் பிரதீபன் நியமனம் பெற்றுள்ளார்.

பிரிவுபசார நிகழ்வில் கலந்துகொண்டிருந்தவேளை கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.அவர், புதிய அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதில்அரசாங்க அதிபராக கடமையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.