மூன்று நாட்களில் வசூலை வாரிக்குவித்த மார்க் ஆண்டனி.. இதுவரை எவ்வளவு தெரியுமா

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் மார்க் ஆண்டனி.

விஷால், எஸ்.ஜே. சூர்யா கூட்டணியில் முதல் முறையாக உருவான இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.

மேலும் வினோத் குமார் இப்படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து இருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது மார்க் ஆண்டனி.

முதல் நாளில் இருந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், மார்க் ஆண்டனி படம் வெளிவந்து மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் ஆகியுள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ஓப்பனிங் என கூறப்படுகிறது.