ரணிலின் வழக்கில் சிக்கப்போகும் மேலும் பலர்! தவறுசெய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்கிறது அநுர தரப்பு


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு தொடர்பில் மேலும் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட உள்ளதாக மேலதிக மன்றாடியார் நாயகம் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்    விசாரணைக்கு அழைக்கப்பட்டப்போது, மேலதிக மன்றாடியர் நாயகம்  இதனைத் தெரிவித்துள்ளார்.

 இதேநேரம் நேற்று பாராளுமன்றில் உரையாற்றிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால  

வீழ்ச்சியடைந்திருந்த சட்டத்தின் ஆட்சியை தற்போது நாங்கள் உறுதிப்படுத்தி வருகிறோம். மக்களுக்கு இல்லாமல் போயிருந்த நீதியை, நியாயத்தை இந்த சமூகத்துக்கு வழங்கி வருகிறோம்.
யார் தவறு செய்தாலும் அவர்களை சட்டத்துக்கு முன் கொண்டுவர இந்த அரசாங்கம் பின்வாகப்போவதில்லை. அதனை நாங்கள் செய்து காட்டி இருக்கிறோம்

இன்று  தராதரம் இல்லாமல் சட்டம் அனைவருக்கும் சமமாக செயற்படுத்தப்படுகிறது. அது பொலிஸ்மா அதிபரா, அமைச்சரா, முன்னாள் ஜனாதிபதியா என்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல.
அதனால் யார் தவறு செய்தாலும் அவர்களை சட்டத்துக்கு முன் கொண்டுவர இந்த அரசாங்கம் பின்வாகப்போவதில்லை என்பதை தெளிவாக தெரிவிக்கிறோம் என்றார்.