பதவிக்காகவே தமிழ் தேசியம் - பகிரங்கமாக கூறும் மணிவண்ணன்


தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி வெறிக்காக கொள்கை என்ற வார்த்தையை வெளிப்படுத்துவதாகவும், தாய் நில போராட்டத்திற்காக உயிர்நீத்தவர்களை வைத்து பதவிக்காக தமிழ் தேசியம் பேசுகின்றார்கள் என்றும் யாழ். மாநகர சபையினுடைய முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

"தேர்தல் என்று வரும் போது அதை தாண்டிய பதவிப்போட்டி, தேர்தலை வெல்ல வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் வந்து விடுகிறது.

இதன் காரணமாக உட்கட்சி மோதல் ஆரம்பமாகி விடுகிறது. தேர்தலில் ஆசன போட்டிக்காக சண்டை இடுகின்றார்கள்.

நாடாளுமன்றம் செல்லவேண்டும் என்ற ஆசையில் விருப்புவாக்குகளுக்காக சண்டை இடுகின்றனர். என்னை பொறுத்தமட்டில் தமிழ் தேசியம் சார்ந்து காணப்படுகின்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து." என தெரிவித்தார்.