இந்திய தலைநகர் டெல்லியில் பரபரப்பான புகையிரத பாதையில் குடையை பிடித்துக் கொண்டு நபர் ஒருவர், அசந்து உறங்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
எனினும் குறித்த நபரை அவதானித்த உதவி புகையிரத ஓட்டுனர், அதே புகையிரத பாதையில் வந்து கொண்டிருந்த புகையிரதத்தை நிறுத்தி அந்நபரை பெரிய அசம்பாவிதத்தில் இருந்து காப்பாற்றியுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.