இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு பயணித்த விமானம் ஒன்றின் சக்கரத்தில் அமர்ந்து சிறுவன் ஒருவன் பயணித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கேஏஎம் விமானம் ஒன்று நேற்று முன் தினம் பயணிகளை ஏற்றிக் கொண்டு டெல்லிக்கு பயணித்துள்ளது.
விமானம் டெல்லியில் தரையிறங்கிய பின்னர் அந்த விமானம் அருகே சந்தேகத்திற்கிடமாக சிறுவன் ஒருவன் சுற்றித் திரிந்துள்ளார்.
சிறுனை பாதுகாப்புப் படையினர் பிடித்துச் சென்று விசாரித்தபோது, சிறுவன் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
காபூல் விமான நிலையத்தில் நுழைந்த சிறுவன் விளையாட்டாக விமானத்தின் நடுப்பகுதி சக்கரம் உள்ள பகுதிக்குள் நுழைந்தபோது விமானம் புறப்பட்டு விட்டதாக கூறியுள்ளார்.
விமானத்தை சோதித்த அதிகாரிகள் எந்த சதிசெயலும் இல்லை என உறுதிப்படுத்திய பின்னர் சிறுவனை மீண்டும் விமானத்தில் ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு அனுப்பி வைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.