பிரேசிலின் (Brazil) சாவோ பவுலோ (São Paulo) சர்வதேச விமான நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 3 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விமான நிலையத்திற்கு காரில் வந்த சிலர், திடீரென துப்பாக்கியுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்து சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
நேற்று (08) இந்த சம்பவத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் 3 பேர் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டவர் அன்டோனியா வின்சியஸ் லோபஸ் கிரிட்ஸ்பேச் என காவல்துறையினர் கண்டறிந்துள்னர்.
கிரிப்டோகரன்சி வணிகத்தில் ஈடுபட்டு வந்த இவருக்கு இவருக்கு சர்வதேச குற்றவியல் குழு கொலை மிரட்டல் விடுத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்பதை தீர்மானிக்க முடியவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் அந்நாட்டுக் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.